முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இது குறித்த வழக்கு இன்றையதினம் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
