இலங்கை தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்படையினரால் இன்று (17) காலை கைப்பற்றப்பட்டிருந்தது.
கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகில் இருந்த ஐந்து பேரை கடற்படையினர் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
