சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது!

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை வழங்க உதவிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு ஐஸ், ஹெரோயின் மற்றும் கைப்பேசி வழங்குவதற்குத் தயாராக இருந்தபோது, பாணந்துறையின் ஹிரணவைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைத பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையின்மை போது, சந்தேகநபர் 35,000 ரூபாய் பணத்தைப் பெற்றதாகத் தெரியவந்தது.

இதன் விளைவாக, குற்றம்சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி உடனடியாக வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளா்ர.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply