வடக்கில் ஏற்படவுள்ள மின்தடை- மின்சாரசபையின் அறிவித்தல்!

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் 26ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண, கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மின் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைப்பதற்கான (Re-conductoring) வேலைகளிற்காக வடமாகாணத்திற்கான 132kV வவுனியா புதிய அநுராதபுர மின் பரிமாற்ற கட்டமைப்பானது எதிர்வரும் ஜப்பசி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை துண்டிக்கப்படுவதால், யாழ்ப்பாண மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் வவுனியா மாவட்டம் முழுவதும் மின் விநியோகமானது துண்டிக்கப்படவுள்ளது.

வேலைகள் பூர்த்தியாகியவுடன் மின் இணைப்பானது உடனடியாக மீள வழங்கப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply