போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
மனம்பிட்டி மோப்ப நாய் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையின் போது பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் பெந்திவெவ பகுதியில் வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதின் போது சந்தேகநபரிடம் இருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
