2025 ஆசிய ரக்பி செவன்ஸ் (Rugby Sevens) தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் ஆரம்பமாகியது.
இதன்போது ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இலங்கை அணி 26 – 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது.
இலங்கை அணி ‘C’ குழுவில் போட்டியிடுகின்ற நிலையில், இன்று சீனா மற்றும் சிங்கப்பூருக்கு எதிராகவும் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
