ஹிக்கடுவ பகுதியில் துப்பாக்கி சூடு!

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வீடு ஒன்றை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்
சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் துப்பாக்கி சூட்டில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுமார் 4 துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், வீட்டின் மதில் மற்றும் ஜன்னல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply