யாழில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் வைத்து இரு சந்தேகநபர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்களிடம் இருந்து 110 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
