ஐஸ் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது- இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி!

யாழில் ஐஸ் போதை பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 25 மற்றும் 23 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 20g ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

கைதான நபர்கள் கைதான வேளையில் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கைதானவர்களில் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்முறை கும்பலை சேர்ந்தவரின் உடமையில் இருந்து சிறிய கத்தி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட காவல் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply