கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு- யாழில் சோகம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி – கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

உடனடியாக இன்னொரு படகுமூலம் கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply