முல்லைத்தீவு பகுதியில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு!

முல்லைத்தீவு பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றிலிருந்து மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.

அதன் உரிமையாளர் தோட்டக்காணியினை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளையில், மலைப்பாம்பு ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது தடுமாறிக் கிடந்துள்ளது.

இதனை அவதானித்த உரிமையாளர் உடனடியாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினார்.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பாம்பினை பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதியில் விடுவித்துள்ளனர்.

தற்போது மழைக்காலம் நிலவி வருவதால் பாம்புகள் அடிக்கடி வெளிப்புற பகுதிகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply