கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் கப்பல்துறைக்கு அருகில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, நீதவான் விசாரணையின் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும், அவர் நீல நிற ஜீன்ஸ் காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் யார் என்பது குறித்த விபரங்கள் என்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொழும்புத் துறைமுகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
