2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம்- ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது.

இந்தநிலையில் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இன்றையதினம் (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய வேளையில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.

அதாவது ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்கள், நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேரத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாடசாலை தவணை ஆரம்பித்தவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply