ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் மாதம் 06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பல் வைத்திய சேவைகள் பணிப்பாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ள காரணத்தினால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் நளின் தம்மிக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
