மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பகஹவத்தை, மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளது.
கம்பஹா பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 8 T-56 தோட்டாக்களும், 15 பயிற்சி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
