யாழ்ப்பாணம் பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை- போதைப்பொருளுடன் 6 பேர் கைது!

யாழில் போதைப்பொருள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றையதினம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாரின் நேற்றைய (24) திடீர் சோதனை நடவடிக்கையின் போது போது, யாழின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதான ஒரு சந்தேகநபரிடம் இருந்து மூன்று கிராம் ஹெரோயினும், ஐந்து பேரிடம் இருந்து வெவ்வேறாக நான்கு கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் சந்தேகநபர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply