ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இந்திய பிரஜை!

ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

குறித்த நபர் நேற்று (26) மாலை 04.15 மணிளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-315 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவரை சோதனையிட்ட வேளையில், குறித்த சந்தேகநபரிடம் இருந்து 02 கிலோ 832 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை கொழும்பின் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டலில் உள்ளூர் போதைப்பொருள் முகவர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை இன்றையதினம் (27) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply