போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது- ஏறாவூர் பிரதேசத்தில் சம்பவம்!

ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள கலைமகள் பாடசாலை வீதிக்கு அருகில் இருந்த இந்த வீட்டை முற்றுகையிட்டிருந்தனர்.

இதன்போது நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதுடைய பெண்ணும் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 5350 mg ஜஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் 3,61000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கைதான பெண்ணை இன்றைய தினம் (27) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply