பெருமளவிலான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பைலட் சார்ஜெண்ட் கைது!

தொம்பே, நாகஹதெனிய, பலுகம பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொம்பே பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த கைது நடவடிக்கை நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து 196 கிலோ 218 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதானவர் இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் பைலட் சார்ஜெண்டாக பணியாற்றி 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபர், நீதிமன்றங்களில் இருந்து தலைமறைவாகி, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான செம்புக்குட்டி ஆராச்சிகே டிலான் தனுஷ்க லக்மாலின் மைத்துனர் என்பதும் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply