வீடொன்றில் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்- சந்தேகநபர் கைது!

நீர்கொழும்பு, போலவலான, மடமா வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 233,200 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், களனி சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த சிகரெட்டுகள் நேற்றுமுன்தினம் (26) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply