யாழில் பிரபல வர்த்தகரின் மகன் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற வேளையில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது.

கைதான சந்தேகநபரிடம் இருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான நபர் பிரபல வர்த்தகரின் மகன் எனவும், ஏற்கனவே ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் கைதிலிருந்து தப்புவதற்காக தமக்கு கையூட்டு வழங்க முயற்சித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply