யாழ் இளைஞர்களிடம் அதிகரிக்கும் வன்முறை- பொலிஸார் தீவிர விசாரணை!

யாழில் இளைஞன் ஒருவனின் கையடக்க தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். நல்லூர் – அரசடி பகுதியில் இளைஞன் ஒருவன் போதைப்பொருள் மற்றும் சிறிய வாள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

கைதான இளைஞனின் நண்பர்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது நேற்றையதினம் (27) ஒரு இளைஞனை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை செய்யப்பட்டது.

விசாரணையின் போது அவரது கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது வாட்ஸ் அப் செயலியில் இன்னுமொரு இளைஞன், கைத்துப்பாக்கி மற்றும் தான் கைத்துப்பாக்கியுடன் காணப்படும் படத்தினை அனுப்பி இருந்தமையை பொலிஸார் கண்டறிந்திருந்தனர்.

இது தொடர்பில் இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply