நாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கமாராக்களை பொருத்த நடவடிக்கை!

நாடெங்கிலும் உள்ள நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கமாராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாதுகாப்பு கமாராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவின்படி பொலிஸ் தலைமையகத்துடன் இணைந்து இந்த ஏற்பாடு செய்யப்படும் எனவும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்பு பெறப்படும் என்றும் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்பு கமாராக்கள் பொருத்தப்படும் என்றும், பின்னர் ஏனைய மாகாண நெடுஞ்சாலைகளிலும் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படும் எனவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே கமாரக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனினும் கொழும்பில் உள்ள அனைத்து பிரதான வீதிகளிலும் பாதுகாப்பு கமாராக்கள் பொருத்தப்படவுள்ளதாகவும் கம்பஹா, களுத்துறை மாவட்ட நெடுஞ்சாலைகள் அதனுடன் இணைந்துள்ள பிரதான வீதிகளிலும் கமாராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply