அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) நாளையத்தினம் (31) நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தன்னிச்சையான இடமாற்ற முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னிச்சையான இடமாற்ற முறைமை இன்று (30) நடைமுறைப்படுத்தப்பட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் ஏற்படக்கூடிய சேவை முடக்கத்திற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்க வேண்டும் என்று அரசாங்க வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
