யாழ். பல்கலை வளாகத்தில் ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து இரண்டு மெகசின்களும், வயர்களும் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் சீலிங்கின் மேல் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக நூலக வளாகத்தில் திருத்த வேலை நடைபெற்றபோதே குறித்த பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த துப்பாக்கி பாகங்கள் இரண்டையும், வயர்களையும் மீட்டுச் சென்றனர்.

அத்துடன் அங்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply