வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை பல்லியவத்தை, அவரக்கொட்டுவ மற்றும் கலகஹதுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25, 21 மற்றும் 28 வயதுடையவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைதானவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரனும் எனக் கூறப்படும், தற்போது தடுப்புக் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் மூன்று சகாக்கள் என தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபர்களிடம் இருந்து மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான 2 கிலோ 165 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் இன்று (31) வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவு பெறப்படவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
