யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மற்றும் 25 வயதுடைய நான்கு இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
