முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறைக்கேடாக ஈட்டியதாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்றையதினம் (31) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம பிணையில் செல்ல அனுமதித்து உததரவிட்டார்.
அதன்படி சந்தேக நபரை ரூ. 50,000/- ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
அத்துடன் சந்தேக நபர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாக நீதவான் அறிவித்தார்.
மேலும் வழக்கை ஜனவரி மாதம் 16ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
