யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ரி-56 ரக துப்பாக்கி கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக நூலக வளாகத்தில் திருத்த வேலை நடைபெற்று வரும் வேளையில், நேற்றையதினம் (30) இரண்டு மெகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன.

இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் கோப்பாய் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த துப்பாக்கி பாகங்கள் இரண்டையும், வயர்களையும் இன்று காலை மீட்டுச் சென்றனர்.

இந்தநிலையில் மீண்டும் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடந்தபோது, அதன் அருகில் ரி-56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வயர்கள் உள்ளிட்ட சில மருத்துவப் பொருட்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து மீண்டும் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதியை முழுமையாகச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply