கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி, 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதில்லப்பட்டிருந்த நிலையில், மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய, தடுப்புக் காவல் உத்தரவைப் பெற எதிர்பார்ப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான கெஹெல்பத்தர பத்மே தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விடயங்களை சமர்ப்பித்தபோதே, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
