குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது!

தமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிக்குராண பிரதேசத்தில் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) மொரடுவை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (31) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹிக்குராண பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரிடம் இருந்து 13 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், கடந்த ஜூலை 11ஆம் திகதி ஹிரண பிரதேசத்தில் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தியமை மற்றும் பாணந்துறை பொலிஸ் பிரிவில் ஒருவரைக் கொலை செய்யத் திட்டமிட்டமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து தமன மற்றும் ஹிரண பொலிஸ் நிலையங்களும், பாணந்துறைப் பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply