நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என, லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் அறிவித்துள்ளார்.
அதன்படி நவம்பர் மாதம் முழுவதும் லாஃப்ஸ் எரிவாயுவின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை தற்போதைய விலையிலேயே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

