யாழில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நாவற்குழி பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


