பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப் பதவிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, பொலிஸ் மா அதிபருக்கு அடுத்தபடியாக உள்ள பொலிஸ் நிர்வாகப் பதவியை மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திரநாயக்க வகித்து வருகிறார்.

எனினும் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சில நெருக்கடியான சூழ்நிலைகள் காரணமாக அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, அடுத்த பொலிஸ் நிர்வாகப் பதவிக்கு நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இவரால் வெற்றிடமாகும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மேதவத்த நியமிக்கப்படவுள்ளார்.

இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பான அறிவிப்பு இன்று (01) பொலிஸ் மா அதிபரால் வெளியிடப்படும் என பொலிஸ் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply