கெஹெல்பத்தார பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த ஐந்து நடிகைகள் தொடர்பில் விசாரணை!

பாதாள உலகக் குழு தலைவர் கெஹெல்பத்தார பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐந்து நடிகைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (31) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றுக்கு தெரிவித்தது.

கெஹெல்பத்தார பத்மேயுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி, அவருடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த நடிகைகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடிகைகள், பாதாள உலகக் குழுவின் போதைப் பொருள் கடத்தல், பணமோசடி, சட்டவிரோத ஆயுதக் கடத்தல் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் ஆராயும் பொருட்டு இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply