தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட கஞ்சா செடி தொகை 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கஞ்சா செடிகளை முற்றாக தீயிட்டு அழிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
அத்துடன் சந்தேக நபரை வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
