ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்றையதினம் (01) மட்டக்களப்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான ஓய்வூதியம் வேண்டும்,
ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்கப்படாமல் 28 வருடங்கள் கடந்துள்ளன,
ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க அரசிடம் நீதி கோருவோம்
முதலான கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றையதினம் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

