தென்னிந்திய தொலைகாட்சியான ஜீ தமிழ் இசை நிகழ்ச்சி சரிகமபவில் இறுதிச்சுற்றுக்கு சபேசன் தெரிவாகி உள்ளார்.
இலங்கையின் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த சபேசன், மிக கடும் சவால்களை சந்திந்து சரிகமப நிகழ்ச்சியில் தடம் பதித்து தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய (02) நிகழ்ச்சியின் போது சபேசன் 03ஆவது பைனலிஸ்ட் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சபேசன் இறுதிச் சுற்றுக்குத் தெரிவானதில் இருந்து அவருக்குச் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
எனினும் சரிகமபவின் இறுதி சுற்றில் வெற்றி மகுடத்தை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
