அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு!

அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இன்று (04) காலை பதிவாகியிருந்தது.

இதன்போது ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் மோதர தேவாலய குழுவின் தலைவரான 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இன்று (4) காலை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply