கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட புளியம்பொக்கணை கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலையின் நுழைவாயிலை மறித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் மாணவர்களும் வகுப்பறைக்கு செல்லாது நுழைவாயிலில் காத்திருந்தனர்.
இதன்போது கிளிநொச்சி வடக்கு வலய திட்டமிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் குறித்த இடத்துக்கு வருகை தந்து பெற்றோர்களுடன் கலந்துரையாடி விடுமுறை நிறைவடைந்ததும் ஆசிரியர் வெற்றிடம் நிரப்புவதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.

