கனடா- கியூபெக் மாகாணத்தின் மொன்றியல் நகர சபைக்கு யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மிலானி தியாகராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்- நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட சட்டத்தரணியான லிங்கராஜா தியாகராஜா மற்றும் சண்டிலிப்பாயைச் சேர்ந்த பாமதி சிவபாதம் ஆகியோரின் மகளே மிலானி தியாகராஜா.
கனடாவின் கோட் டெஸ்-நெய்ஜ் பிரதேசத்தில் பிறந்து, அங்கு கல்வி கற்று வந்த மிலானி தியாகராஜா, தனது கடும் உழைப்பால் இந்த நிலைக்கு வந்துள்ளார்.
கனடா சேவை மையத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய இவர், மக்களுக்கு சேவை செய்வதில் நீண்ட அனுபவமும் பெற்றவர் ஆவார்.
தனது வெற்றியை அடுத்து மிலானி தியாகராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
டார்லிங்டனில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரின் குரலும் மதிக்கப்படும், பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பதை உறுதிசெய்கிறேன்.
நமது சமூகத்தின் இணைப்பை வலுப்படுத்தியே இந்தப் பணியை மேற்கொள்வேன்.
நகரத்தின் தூய்மை மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்தல், வீடற்றவர்களின் பிரச்சினைகளை தீர்த்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
