களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் ஒரு பொதி இன்று (05) காலை கரை ஒதுங்கியிருந்தது.
கடற்கரைக்கு அருகில் இருந்த சுற்றுலா ஹோட்டல் ஊழியர்கள் இதனை அவதானித்து, பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கினார்.
இதனையடுத்து குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக அந்தப் பொதியை எடுத்துச் சென்றனர்.
கிடைக்கப்பெற்ற பொதியை சோதனையிட்ட வேளையில், மீட்கப்பட்டது ஹஷிஷ் போதைப்பொருள் என தெரியவந்துள்ளது.
3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் பொதியினுள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுத்துறை கட்டுக்குறுந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், களுத்துறை தெற்குப் பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
