பல குற்ற செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 பேர் கைது!

நாடு முழுவதும் குற்றம் மற்றும் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது பல குற்ற செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட சோதனை நடவடிக்கையின் போது 32,201 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 736 நபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 271 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் மதுபோதை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply