சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை- புதுக்குடியிருப்பில் சம்பவம்!

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இயங்கிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை இடப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் தேவிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன கைப்பற்றப்பட்டன.

எனினும் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரின் வருகையை உணர்ந்து தப்பியோடியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply