யாழில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் வாள், கைக்கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
