உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதில் பிரதம நீதியரசராக நியமனம்!

பதில் பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால், அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் வரை செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றையதினம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply