ஜா-எல பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல்!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று கடந்த 5 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று மதுபானம் விற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ஆம் திகதி பௌர்ணமி தினம் அன்று ஜா-எல பிரதேசத்தில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன்போது சில்லறையாக மதுபானம் விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான நிலையம் ஒன்று திறக்கப்பட்டு மதுபானம் விற்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த மதுபான விற்பனை நிலையத்துக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இலங்கை மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன், அதற்குரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்து மதுவரித் திணைக்களம் தீவிர அவதானத்துடன் இருப்பதுடன், இவ்வாறான விடயம் தொடர்பில் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply