ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதுடைய தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில், அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்றைய தினம் மாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
திருமணமாகி நீண்ட வருடங்களின் பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்திருந்த குறித்த தாய், ஒரேமாதத்தில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
