2026 வரவு செலவுத் திட்டம்- பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளம் உயர்வு!

2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க இன்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்.

இதன்போது 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதில் வரவுக் கொடுப்பனவுக்கான 200 ரூபாவை அரசாங்கம் வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply