எம்.பி சாணக்கியனின் தந்தையார் காலமானார்!

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம், தனது 67ஆவது வயதில் நேற்று காலமானார்.

அன்னாரின் திருவுடல் இன்றையதினம் (08) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் நாளையதினம் (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் அவர்கள், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வரும் ஆவார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply